ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்த ரயில்வே!

ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்த ரயில்வே!

நடைபாலம்

நடைபாலம்

பல்ஹர்ஷா பிளாட்பாரம் எண் 1ல் இருந்து பிளாட்பாரம் எண் 4க்கு இடையேயான மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. சுமார் 60 அடி உயர பாலத்தில் இருந்து பல பயணிகள் தண்டவாளத்தில் விழுந்தனர். இந்த விபத்தில் சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர்.

நேற்று மாலை 5.10 மணியளவில் நாக்பூர் பிரிவின் பல்ஹர்ஷாவில் உள்ள ரயில் நிலையத்தின் நடை பாலத்தின் கட்டப்பட்ட பலகையின் ஒரு பகுதி கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

பல்ஹர்ஷா பிளாட்பாரம் எண் 1-ல் இருந்து பிளாட்பாரம் எண் 4-க்கு இடையேயான மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. பாலத்தில் இருந்து வீழ்ந்ததில் 48 வயதான பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், "பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களை விரைவில் குணமடைய மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றுவதன் மூலம் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Accident, Maharashtra, Railway Station