Home /News /national /

மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து.. பாஜக எம்எல்ஏவின் மகன் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!

மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து.. பாஜக எம்எல்ஏவின் மகன் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு!

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் வர்தாவில் உள்ள சாவாங்கி மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் நள்ளிரவில் மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வர்தா காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஹோல்கார் கூறும்போது, மருத்துவ மாணவர்கள் தியோலியில் இருந்து வர்தாவுக்கு வந்தகொண்டிருந்த போது செல்சுரா அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து கார் கவிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

    Also read:  '2024ல் பாஜகவை வீழ்த்த முடியும்.. ஆனால்..' - புள்ளிவிவரத்துடன் பேசிய பிரசாந்த் கிஷோர்

    உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் வர்தாவில் உள்ள சாவாங்கி மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில், நீரஜ் செளகான், விவேக் நந்தன், பிரத்யூஷ் சிங் மற்றும் சுபம் ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

    அவிஷ்கார் ரகாங்தாலே மற்றும் பவன் சக்தி ஆகியோர் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகின்றனர். இதில், மாணவர் அவிஷ்கார் ரகாங்தாலே, பாஜக எம்.எல்.ஏ., விஜய் ரகாங்தாலேவின் மகன் ஆவார்.

    Also read: பாஜகவின் மிகப்பெரிய பலம் - ரகசியத்தை உடைத்த பிரசாந்த் கிஷோர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Accident, Maharashtra

    அடுத்த செய்தி