ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூபாய் நோட்டில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்..பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

ரூபாய் நோட்டில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்..பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

பாஜக எம்.எல்.ஏ. நூதன கோரிக்கை

பாஜக எம்.எல்.ஏ. நூதன கோரிக்கை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்த விவாதத்தின் விளைவாக இது போன்ற கோரிக்கைகள் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  இந்திய ரூபாய் நோட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு சாம்பிளாக மார்ப் செய்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்த விவாதத்தின் விளைவாக இது போன்ற கோரிக்கைகள் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால்,“ நாட்டில் இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும் மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்களை சேர்ப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் கடவுள் அருள் இல்லையென்றால் பலன் அளிக்காது” என பேசினார்.

  இது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், பல தலைவர்களும் தங்கள் யோசனைகளை தரத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் என பல தலைவர்களின் பெயர்களை பரிந்துரை செய்து வரும் நிலையில், தற்போது பாஜக எம்எல்ஏ ஒரு படி மேலே சென்று பிரதமர் மோடியையும் இந்த பரிந்துரை பட்டியலில் சேர்த்துள்ளார்.

  மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ ராம் கதம் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியின் மாபெரும் தியாகம், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு ஆகியவற்றை நாம் எப்படி கவனிக்காமல் புறக்கணிக்க முடியும். நமது நாட்டின் பெருமையை அவர் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறார்" எனக் கூறி பிரதமர் மோடியின் படம் பொறித்த ரூ.500 நோட்டை மார்ப்பிங் செய்து ட்வீட்டில் வைத்துள்ளார்.

  பிரதமர் மோடியுடன் சத்தரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவர்கர் ஆகியோரின் படங்களையும் ரூபாய் நோட்டில் வைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ராம் கதம் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: 2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் .. 50% பணி முடிந்தது

  1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்திய ரூபாய் நோட்டில் ஒரு மனிதரின் படம் இடம் பெற்றுள்ளது என்றால் அது அண்ணல் காந்தியின் படம் மட்டுமே. சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டன் மன்னரின் படம் இடம் பெற்றிருந்த நிலையில், அவரின் படம் மாற்றப்பட்டு சாரநாத் சிங்க முகத் தூண்களின் படம் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1969ஆம் ஆண்டில் தான் முதல் முதலாக காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம் பிடித்தது. அதன் பின்னர் வேறு நபர்களின் புகைப்படங்கள் இதுவரை இடம்பெற்றதில்லை.

  Published by:Kannan V
  First published:

  Tags: Arvind Kejriwal, Indian Rupee, PM Modi, Rupee