ஹோம் /நியூஸ் /இந்தியா /

கலைகிறதா மகாராஷ்டிரா அரசு - முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மாலை ராஜினாமா செய்ய போவதாக தகவல்

கலைகிறதா மகாராஷ்டிரா அரசு - முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மாலை ராஜினாமா செய்ய போவதாக தகவல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை கலைகிறது

மகாராஷ்டிரா சட்டப்பேரவை கலைகிறது

Maharashtra crisis - மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்களின் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அம்மாநில சட்டப்பேரவை கலைக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்களின் போர்க்கொடி காரணமாக பெரும்பான்மை இழந்த நிற்கும் உத்தவ் தாக்ரே இன்று மாலை ராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்ரே மகனான ஆதித்யா தாக்ரே, தனது ட்விட்டர் பக்கத்தில் 'அமைச்சர்' என்ற குறிப்பையும்  நீக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.மொத்தமுள்ள 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 வேட்பாளர்களையும், பாஜக 5 வேட்பாளர்களையும் களம் இறக்கியது.

ஒரு எம்.எல்.சி வெற்றி பெற, 26 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.ஆனால் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றதால், கொறடா உத்தரவை மீறி ஆளுங்கட்சி வேட்பாளர்கள், பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக புகார் எழுந்தது. மேலவைத் தேர்தல் முடிந்ததும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் சுமார் 35 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று தங்கினர். முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள இந்த எம்எல்ஏக்கள் நேற்றிரவு சூரத்தில் இருந்து கிளம்பி அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை பலம் இல்லாததால் சிவசேனா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிலை துடைப்பத்தால் பெருக்கி வழிபட்ட குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

சிவசேனாவுக்கு 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க 37 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. 37 எம்எல்ஏக்கள் ஆதரவை ஷிண்டே பெற்றுவிட்டால், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரிக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: Shiv Sena, Uddhav Thackeray