Home /News /national /

மன்னர் மகாராணா பிரதாப் சிலை திறப்பு விழா - ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மன்னர் மகாராணா பிரதாப் சிலை திறப்பு விழா - ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மன்னர் மகாராணா பிரதாப் சிலை திறப்பு விழா (படம்: ANI)

மன்னர் மகாராணா பிரதாப் சிலை திறப்பு விழா (படம்: ANI)

ராஜஸ்தானில் புகழ்பெற்ற ராஜ்புத்திர மன்னர்களில் ஒருவரான மகாராணா பிரதாப்பின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் குதிரையின் மேல் மகாராணா பிரதாப் அமர்ந்திருக்கும் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிலை முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பனச்சந்த் மேக்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா நடைபெற்ற இடத்தின் அருகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பலரின் வீடுகள் உள்ளன. பாஜக பிரமுகரான பிரேம் நாராயண் காலவ் இதை “வெட்கக்கேடு” என விமர்சித்திருப்பதோடு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Lockdown, Rajastan

    அடுத்த செய்தி