• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும்... பிரதமருக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கடிதம்!

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும்... பிரதமருக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கடிதம்!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. (கோப்புப் படம்)

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தவ் தாக்கரே அனுப்பியுள்ள கடிதத்தில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மாநில அரசு நிபுணர் குழு அமைத்ததாகவும், கடந்த 2013 நவம்பர் மாதம் மத்திய அரசிடம் அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: