ஹோம் /நியூஸ் /இந்தியா /

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. தொடரும் நில அதிர்வால் திகிலில் மக்கள்.!

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்.. தொடரும் நில அதிர்வால் திகிலில் மக்கள்.!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

  நேற்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்படுகிறது. இன்று, அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.

  முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆகும். நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் என்றும் கூறப்பட்டுள்ளது.

  முன்னதாக, நேற்று நேபாளத்தில் 6.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, 6.6, 6.27 என்ற அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். இந்திய தலைநகர் டெல்லியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று முதல் தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவதால் வட மாநில மக்கள் திகிலில் உள்ளனர்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Assam, Earthquake