கோவை அருகே சுற்றி வந்த மக்னா யானை கேரளாவில் உயிரிழப்பு

தமிழக, கேரள வனப்பகுதியில் வாயில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை உயிரிழந்தது.

  • Share this:
கோவை அருகே தமிழக-கேரள வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை, குடியிருப்புகளை அடிக்கடி சேதப்படுத்திவந்ததால் அதனை புல்டோசர் என கேரள மக்கள் அழைத்து வந்தனர். உடல் வலிமையுடன் வலம் வந்த யானை கடந்த ஒரு மாதமாக வாயில் பலத்த காயத்துடன் சாப்பிட முடியாமல் தவித்து வந்தது.

கோவை மாவட்ட மற்றும் கேரள வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தபோது, அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி வெடித்ததில், யானையின் வாய்ப்பகுதி சேதமடைந்து, நாக்கு துண்டாகி இருப்பது தெரியவந்தது. அதற்கு இனி சிகிச்சை அளிக்க முடியாது என கேரள வனத்துறையினர் யானையை விடுவித்தனர்.

உடல் மெலிந்து மரண தருவாயில் இருந்த யானைக்கு, அவ்வப்போது உணவுப்பொருட்கள், மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். சிகிச்சைக்காக மக்னா யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தினால், அதை தாங்கும் அளவிற்கு அதன் உடல் நிலை இல்லை என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.


மேலும் படிக்க...அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று

 இரண்டு நாட்களுக்கு முன் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறி கேரள மாநிலம் சோலையூர் அருகே மரப்பாலம் பகுதியில் மக்னா யானை அடைக்கலம் புகுந்தது. இந்நிலையில், மக்னா யானை இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது. அறிவியல் யுகத்தில் ஒரு பிரமாண்ட உயிரினம் நம் கண் முன்பே மரணத்திருப்பதற்கு யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுகிறது.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading