• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 500 ரூபாய் செலவில் எளிமையான திருமணம்: பொண்ணு மாஜிஸ்திரேட்.. மாப்பிள்ளை ராணுவ மேஜர்...!

500 ரூபாய் செலவில் எளிமையான திருமணம்: பொண்ணு மாஜிஸ்திரேட்.. மாப்பிள்ளை ராணுவ மேஜர்...!

எளிமையான திருமணம்

எளிமையான திருமணம்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மாஜிஸ்திரேட்டாக பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவரும், லடாக்கில் ராணுவ மேஜராக பணியாற்றும் ராணுவ வீரரும் வெறும் 500 ரூபாய் செலவில் தங்களது திருமணத்தை நடத்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர்.

  • Share this:
மத்தியப்பிரதேசத்தில் மாஜிஸ்திரேட் மற்றும் ராணுவ மேஜர் ஆகியோர் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து எளிமையாக பதிவு திருமணம் செய்துகொண்டு முன் உதாரணமாக மாறியுள்ளனர்.

திருமணம் என்றாலே இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் செய்யப்படுகிறது. காஸ்ட்லியான புடவைகள், அலங்காரங்கள், தோரணைகள் மற்றும் மேளங்கள் என திருமண வீடு விழாக்கோலம் பூண்டிருக்கும். பணம் இருப்பவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை தங்களால் இயன்ற அளவில் திருமணத்தை ஆடம்பரமாக செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடன் வாங்கியாவது திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவபர்களும் உண்டு.

இதனால் திருமணத்துக்கு பிந்தைய ஆண்டுகளில் கடனை கட்ட கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். திருமணத்துக்காக வாங்கப்படும் கடனை கட்ட முடியாமல் தவிப்பவர்கள் பலருக்கு விவாகரத்து ஆன கதையும் உண்டு.

எளிமையான திருமணம்


இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மாஜிஸ்திரேட்டாக பணியாற்றும் பெண் நீதிபதி ஒருவரும், லடாக்கில் ராணுவ மேஜராக பணியாற்றும் ராணுவ வீரரும் வெறும் 500 ரூபாய் செலவில் தங்களது திருமணத்தை நடத்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் சிவாங்கி என்பவர் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார்.

அவருக்கும் லடாக்கில் ராணுவ மேஜராக பணியாற்றும் அன்கித் சதுர்வேதிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதால் திருமணத்தை நடத்த முடியாமல் இருந்துள்ளனர்.

Also read:  சமூக வலைதளத்தால் நின்று போன திருமணம்... 

வைரஸின் தீவிரம் குறையாத நிலையில் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் நடத்த திட்டமிட்ட அவர்கள், திங்கட்கிழமை அன்று வெறும் 500 ரூபாய் செலவில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களின் திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய தம்பதிகள், தங்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது. இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என முடிவு செய்து, மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்.

Also read:   கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்!

எங்களைப் போலவே, மற்றவர்களும் மிகவும் எளிமையாக, ஆடம்பர செலவுகளை தவிர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற அவர்களின் பதிவுத் திருமணத்தை தார் மாவட்ட ஆட்சியர் அலோக்குமார் சிங் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமணத்துக்கு பிறகு இருவரும் அருகில் உள்ள தர்வேஷ்வர் மற்றும் தார்நாத் கோவில்களில் தரிசனம் செய்தனர். ராணுவ அதிகாரி மற்றும் நீதிபதி இருவரும் பொருட் செலவில்லாமல், ஆடம்பரங்களை காட்டாமல் எளிமையாக திருமணம் செய்து கொண்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதேபோல், வரதட்சணை மற்றும் கடன் வாங்காமல் எளிமையாக திருமணம் செய்து கொண்டால் பல தம்பதிகளின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: