• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மரடோனா ஒரு மேஸ்ட்ரோ.. விளையாட்டின் அதிசிறந்த தருணங்களை கொடுத்தவர்.. பிரதமர் மோடி இரங்கல்

மரடோனா ஒரு மேஸ்ட்ரோ.. விளையாட்டின் அதிசிறந்த தருணங்களை கொடுத்தவர்.. பிரதமர் மோடி இரங்கல்

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கால்பந்து வீரர் மரடோனாவின் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மரடோனா. அர்ஜெண்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடி 34 கோல்களை அடித்திருக்கும் மரடோனா, அந்நாட்டின் அணிக்கு 1986-ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தார்.

    மரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது வழக்கறிஞர் மரண செய்தியை உறுதி செய்துள்ளார். மரடோனாவின் மறைவு உலகம் முழுவதிலும் இருக்கும் கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மறைவுக்கு பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கால்பந்து வீரர் மரடோனாவின் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும், கால்பந்து மைதானத்தில் சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்குக் கொடுத்த மரடோனாவின் அகால மறைவு, அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: