• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரூ.10,600 கோடி அபராதம்- ப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ரூ.10,600 கோடி அபராதம்- ப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்

ப்ளிப்கார்ட்நிறுவனர் சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது.

மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களுக்கு 1.35 பில்லியன் டாலர்(10,600 கோடி) அபராதம் விதித்ததோடு, வழக்கை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தை தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து , பிளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு தான் விலகி விட்டதாகவும் தற்போது தனக்கும் ப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பலமுறை இதுகுறித்து அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில் 12 வருடங்கள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி மகாதேவன், கடந்த  12 ஆண்டுகளாக அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இது குறித்து 3 வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: