1500 ரூபாய் உதவித்தொகை என்ற அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி!

தேர்தல் நடத்தை விதிகள் தடை விதிக்கிறது. நடத்தை விதிகளை மீறி நிதியுதவி திட்டத்தை அறிவித்த அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி தேனியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

1500 ரூபாய் உதவித்தொகை என்ற அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி!
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: April 4, 2019, 3:11 PM IST
  • Share this:
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையை எதிர்த்து தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தேர்தல் நடத்தை விதிகள் தடை விதிக்கிறது. நடத்தை விதிகளை மீறி நிதியுதவி திட்டத்தை அறிவித்த அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி தேனியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


மேலும் அந்த மனுவில், தற்போது தமிழக அரசுக்கு, 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியிருப்பதாக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள முதியோர் ஓய்வூதியம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாக வழங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், தற்போதைய அறிவிப்பு என்பது விதிகளுக்கு முரணாக இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவு படி தேர்தல் வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடரமுடியது எனவும், அதன்படி இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading