முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியுடன் 15 நாள் கழித்து மீண்டும் திருமணம் - சிக்கிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்

மனைவியுடன் 15 நாள் கழித்து மீண்டும் திருமணம் - சிக்கிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசின் இலவச திருமண திட்டத்தில் பயணடைய வேண்டும் என்ற ஆசையில் இந்த விபரீத செயலில் இவர் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் புதிதாக மணம் முடித்த மனைவியுடன் அடுத்த 15 நாளிலேயே மீண்டும் திருமணம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நைதிக் சவுத்ரி என்பவர் தேசிய மாணவர்கள் சங்கம் எனப்படும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பிலும் உள்ளார்.

இவருக்கு 15 நாள்களுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் சாகர் பகுதி பாஜக எம்எல்ஏ சைலேந்திரா ஜெயின் அரசின் இலவச திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் 135க்கும் மேற்பட்ட ஜோடிகள் பதிவு செய்து பங்கேற்றுள்ளன. இந்த இலவச திருமணத் திட்டத்தில் தானும் பயனடைய வேண்டும் என நைதிக் சவுத்ரிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்மையில் மணம் முடித்த மனைவியை இந்த இலவச திருமண விழாவுக்கு அழைத்து சென்று மீண்டும் புதிதாக திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இவர் மனைவியுடன் மண மேடையில் இருந்த நிலையில், இவரின் மோசடி குறித்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து நைதிக் சவுத்ரியை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்தனர்.

இதையும் படிங்க: சமூக வலைத்தளத்தின் பவரால் 10 வயது சிறுமிக்கு கிடைத்தது செயற்கை கால்

இந்த சம்பவத்தை கிண்டலடித்து விமர்சித்து மாநில பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் லோகேந்திரா பாசாசர் ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் மாநில அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மோசடியாக இரண்டாம் முறை திருமணம் செய்ய முயன்று காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார்.இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் கமல்நாத் அவர்களே என அவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் திட்டத்தை இதுபோன்று யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. எனவே, நான் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தேன் என விழாவை ஏற்பாடு செய்த பாஜக எம்எல்ஏ சைலேந்திரா ஜெயின் கூறியுள்ளார்.

First published:

Tags: Congress leader, Indian National Congress, Madhya pradesh