மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முகநூல் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் ஜோடிக்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் 2020 மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றுக்கொடுத்துள்ளார் அந்தப்பெண். 6 மாதத்தில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்திலும் அரசல் புரசலாக பேச்சுகள் எழுத் தொடங்கியது. இது எங்களுடைய குழந்தை தான் என் கணவருக்கு உண்மை தெரியும் எனக் கூறிவந்துள்ளார்.
ஒருகட்டத்தில்இந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை என கணவன் கூற விஷயம் விபரீதமானது. குழந்தைக்காக பல தம்பதிகள் தவமாய் தவமிருந்துக்கொண்டிருக்க இளம்பெண் வாழ்வில் அவள் பெற்றேடுத்த குழந்தையே புயலாய் வீசத் தொடங்கியது.மாமியார் மற்றும் அக்கம்பக்கத்தினரின் வார்த்தை கணைகள் அவளை சுட்டெரித்தது. ஒரு கட்டத்தில் நீ இந்த வீட்டில் இருந்தால் என் குடும்ப மானமே போய்விடும் வெளியே போ எனக் கூறி இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார் மாமியார். கணவனிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. கண்ணீருடன் தாய் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.
இதனையடுத்து நீதி வேண்டி நீதிமன்ற படியேறினார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அந்தப்பெண்ணின் கணவன், மாமியார் ஆகியோர் கவுன்சிலிங் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணவன் இந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை எனக் கூறி வாதிட்டுள்ளார். சரி DNA பரிசோதனை செய்தால் உண்மை தெரிந்துவிடும் அதற்கான ஏற்பாட்டை செய்துவிடலாம் எனக் கூறியுள்ளனர். அதன்பின்னரே அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.கவுன்சிலிங் சென்ற அந்தப்பெண் திருமணத்துக்கு முன்பு நடந்த ரகசியத்தை ஏற்கனவே உடைத்துவிட்டார்.'
Also Read: பண்டிகை லீவு வேணும்.. மாணவர்களுக்கு முன் முந்திக்கொண்ட ஆசிரியர்கள்
இந்த காதல் ஜோடிக்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது உண்மை தான். இந்த திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பே கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர். இருவரும் தாம்பத்தியத்தில் இருந்தபோது அந்தப்பெண் கருவுற்றுள்ளர். அதன்பின்னரே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது அந்தப்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். மணமகன் வீட்டாருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை. கணவன் – மனைவிக்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் திருமணத்துக்கு முன்பு மனைவியை கர்ப்பமாக்கியதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் இருந்துள்ளார். இதன்பின்னர் அந்த நபருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு தைரியம் கொடுத்துள்ளனர். அதன்பின்னரே திருமணத்துக்கு முன்பு நடந்ததை தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாமியார் தன் மருமகளையும் பேரனையும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Husband Wife, Illegal affair, Love, Madhya pradesh