அவசர சிகிச்சைப் பிரிவின் சாவி தொலைந்ததால் உயிரிழந்த பெண்...!

அவசர சிகிச்சைப் பிரிவின் சாவி தொலைந்ததால் உயிரிழந்த பெண்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 5, 2020, 10:45 PM IST
  • Share this:
மத்திய பிரதேச மாநிலத்தின், தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவு கதவின் சாவி தொலைந்ததால், பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயது பெண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்தது. இதையடுத்து கொரோனா சோதனைக்காக அவரது ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால், உறவினர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவு கதவின் சாவியை தேடுவதில் ஊழியர்கள் நீண்ட நேரம் செலவிட்டுள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் அதிகரிக்கவே, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முயன்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி 55 வயதான அந்த பெண் உயிரிழந்தார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading