ஹோம் /நியூஸ் /இந்தியா /

'என்னை கல்யாணம் பண்ணு.. பேஸ்புக் மேசேஜ லீக் பண்ணுவேன்' - தோழியின் வீடு புகுந்து மிரட்டிய இளம் பெண்!

'என்னை கல்யாணம் பண்ணு.. பேஸ்புக் மேசேஜ லீக் பண்ணுவேன்' - தோழியின் வீடு புகுந்து மிரட்டிய இளம் பெண்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தோழி வீட்டிற்கு புகுந்து கலாட்டா செய்த அந்த பெண், திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

    தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறி பெண் தோழி ஒருவர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த இளம் பெண் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயது இளம் பெண்கள் சமூக வலைத்தளம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர்.இருவரும் இடையே நட்பு உருவாகி அதீத நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் திடீரென்று ராஜஸ்தானின் நகவுர் பகுதியில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்யத் தொடங்கியுள்ளார்.

    தனக்கும் அந்த வீட்டு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என வீட்டினரிடம் மிரட்டி கலாட்டா செய்த அந்த பெண், இல்லையென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். தனது கோரிக்கையை ஏற்காவிட்டால் இருவரும் பேசிய சாட்டிங் பதிவுகளை லீக் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அந்த பெண் செய்த கலாட்டாவால் மிரண்டு போன ராஜஸ்தான் பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எல்லாரும் ஒழுங்கா இருக்கணும்.. பட்டாக் கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்!

    இதையடுத்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறை கைது செய்தது. இந்த கலாட்டா சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Madhya pradesh, Rajasthan