மத்தியப் பிரதேச மாநிலத்தில் சியோனி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பிப்ரவரி 5ஆம் தேதி விழா ஒன்று நிகழ்ந்தது. இந்த விழாவில் ஆளும் பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் பங்கேற்று தலைமை தாங்கினார். அப்போது பள்ளி மாணவர் ஒருவர் கவிதை ஒன்றை வாசித்தார். அந்த கவிதையில் அண்ணல் காந்தியை விமர்சிக்கும் விதமான வரிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் பிரிவினையின் போது காந்தி அமைதி காத்து குற்றம் இழைத்தார். ராட்டை சக்கரத்தை சுற்றியவர்களால் மட்டும் தான் நாடு சுதந்திரம் கிடைத்தது என்றால், சுதந்திரத்திற்கு பாடுபட்டு தூக்கில் தொங்கியவர்கள் எல்லாம் யார் என்ற அர்த்தங்களில் அந்த கவிதையின் வரிகள் இருந்தன. அந்த மாணவர் கவிதை வாசித்து முடித்த உடன் பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் உற்சாகத்துடன் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா இது தொடர்பாக மெமோ ஒன்றை கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளார். "அன்னல் காந்தியை அவமானப்படுத்துவதை மன்னிக்கவே முடியாது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு காந்தி மீது மரியாதை இருந்ததே இல்லை. மாணவர் மீது எந்த தப்பும் இல்லை. இந்த கவிதையை எழுதி வாசிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மீது தான் தவறு" என மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 கி.மீ ரயில் தண்டவாளம் திருடு போனதால் அதிர்ச்சி... பீகாரில் அடுத்த பகீர் சம்பவம்!
"சிறுவன் கவிதை வாசித்ததை எல்லாம் நாம் பெரிதுபடுத்த கூடாது, காங்கிரஸ் சின்ன பையனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்" என சம்பந்தப்பட்ட பாஜக எம்எல்ஏ பதில் அளித்துள்ளார்.இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விழாவில் மாணவனுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியருக்கும் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Gandhi, Madhya pradesh, Mahatma Gandhi