உ.பியைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

உ.பியைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

கோப்புப்படம்.

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் புதிய அவசர சட்டத்துக்கு மத்தியபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 • Share this:
  உத்தரப் பிரதேசத்தில் கட்டாயப்படுத்தியோ, நேர்மையற்ற முறையிலோ மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. யோகி ஆதித்யநாத் கொண்டுவந்த அந்தச் சட்டத்த்துக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல, மத்தியப் பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அமைச்சரவை கட்டாய மதமாற்றத் தடுப்பு அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் கொரோனா காரணமாக ரத்தாகியுள்ளது.

  இந்நிலையில் மாநில அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 2 அல்லது அதற்குமேற்பட்டோரை மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதனுடன் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க முடியும். ஏற்கனவே உத்தரபிரதேச அரசு இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், மத்தியபிரதேசத்திலும் மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் அமலாக உள்ளது.

  இதனிடையே உணவு, மருந்து ஆகியவற்றில் கலப்படம் செய்வோர் ஆயுள் முழுக்க சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்ஹான் எச்சரித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: