ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிங்கிள்ஸ்க்கு ரூ.5க்கு டீ.. காதலில் தோல்வி அடைந்த இளைஞரின் டீக்கடை வைரல்

சிங்கிள்ஸ்க்கு ரூ.5க்கு டீ.. காதலில் தோல்வி அடைந்த இளைஞரின் டீக்கடை வைரல்

காதல் தோல்வியால் டீக்கடை தொடங்கிய இளைஞர்

காதல் தோல்வியால் டீக்கடை தொடங்கிய இளைஞர்

தன்னை கைவிட்ட காதலியின் பெயரின் முதல் எழுத்தான M இல் தொடங்கும் விதமாக M Bewafa Chaiwala என்ற பெயரில் டீக்கடை ஒன்றை இளைஞர் தொடங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  காதல் தோல்வியால் விரக்தியால் வாழ்க்கையே தொலைந்து போனதாக சோக வாழ்க்கையை தேர்வு செய்வதே இளசுகள் மத்தியில் வாடிக்கையாக உள்ளது. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் காதல் வாழ்க்கை போனால் என்னவென்று அதில் இருந்து மீண்டு, புதிய டீக்கடை திறந்து தொழில் வாழ்க்கை தொடங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

  மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில் M Bewafa Chaiwala என்ற பெயரில் ஒரு புதிய டீக் கடை பிரபலமாகியுள்ளது. இந்த டீக்கடைக்கு பின்னணியில் உள்ள சுவரசியமான கதையே இதற்கு காரணம். இந்த கடையின் உரிமையாளர் பிஏ இறுதியாண்டு படிக்கும் இளைஞரான அந்தார் குர்ஜர்(Antar Gurjar). இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உறவினர் திருமணத்தில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.பின்னர் இருவரும் செல்போன் மூலம் பேசத் தொடங்கி காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில், அந்தாரின் சுமார் இரண்டு வருட காதல் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது.

  அந்த பெண் அந்தாரை கைவிட்டு வேறு ஒரு ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மனம் உடைந்து போன அந்தார் தனது கையில் அந்த பெண்ணின் முதல் எழுத்தை பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் நண்பர்கள் அந்தாரை காப்பாற்றி மீட்டுள்ளனர். அவரின் நண்பர் ஒருவர், நீ செத்து போக முடிவெடுத்து முட்டாள் தனமானது. அதற்கு பதிலாக நீ அந்த தைரியத்தை வாழ பயன்படுத்து என்று அறிவுரை கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணியை தொட மறுத்த மருத்துவர்கள்.. பிரசவித்த சிசு பலியான சோகம்!

  இதைத் தொடர்ந்து திடமான சிந்தனையுடன் வாழ முடிவு செய்த அந்தார், தன்னை கைவிட்ட காதலியின் பெயரின் முதல் எழுத்தான M இல் தொடங்கும் விதமாக M Bewafa Chaiwala என்ற பெயரில் டீக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.

  இந்த கடையின் ஸ்பெஷலிட்டி என்னவென்றால் காதலில் இருப்பவர்களுக்கு ரூ.10க்கு டீ வழங்கப்படும், ஒருவேளை நீங்கள் காதலில் தோல்வி கண்டவர் என்றால் உங்களுக்கு ரூ.5க்கு டீ வழங்கப்படும்.இவரின் டீக்கடை உள்ளூர் வட்டாரத்தில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளம் மூலம் இனைய உலகத்திலும் வைரலாகி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Love failure, Madhya pradesh, Tea Stall