Home /News /national /

அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்ட நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த கடை உரிமையாளர்

அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்ட நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த கடை உரிமையாளர்

குடிபோதையில் இருந்த நபர் கடை உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் இருந்த நபர் கடை உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் இருந்த நபர் கடை உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் சமோசா சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடை உரிமையாளரின் அனுமதி இன்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள சோலா என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இது தொடர்பாக சோலா பகுதி காவல் நிலைய ஆய்வாளர் கூறியதாவது, இப்பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சீதாராம் என்ற மகன் உள்ளார். இருவரும் கடையை பார்த்துக் கொண்டு வரும் நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது கடைக்கு அதே பகுதியில் வசித்து வரும் விநோத் என்பர் வந்துள்ளார். விநோத் பயங்கரமான குடிபோதையில் இருந்துள்ள நிலையில், கடை முதலாளியான ஹரி சிங்கிடம் கேட்காமலேயே கடையில் இருந்த சமோசாவை எடுத்து சாப்பிட்ட முயன்றுள்ளார்.

    இதனால் கடும் கோபமடைந்த உரிமையாளர் ஹரி, விநோத்தை கண்டித்துள்ளார். போதையில் இருந்த விநோத் பதிலுக்கு ஹரியிடம் மோசமாக பேசி திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் விநோத்தை டீ போடும் பாத்திரம் மற்றும் பெரிய கம்பை கொண்டு உரிமையாளர் ஹரி மற்றும் அவரது மகன் சீத்தாரம் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விநோத் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விநோத்தின் தாயார் ரமாவதி காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஹரிசிங்கும் அவரது மகனும் முதலில் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், இருவரை தேடிய காவல்துறை நேற்று கைது செய்துள்ளது.

    இதையும் படிங்க: பிளைட்டில் வந்து கொள்ளை.. கொச்சியை அதிரவைத்த வடமாநில கொள்ளையர்கள் கைது - தீவிர விசாரணையில் போலீஸ்

    சம்பவத்தில் தொடர்புடைய இரு குடும்பங்களும் ஒரே பகுதியில் வசித்துவரும் நிலையில், இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. சமோசா சாப்பிட்டதற்காக ஒரு நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Madhya pradesh

    அடுத்த செய்தி