கஞ்சா பயன்படுத்த மேலும் ஒரு இந்திய மாநிலத்துக்கு அனுமதி...!

கஞ்சா

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் கஞ்சா விளைவிக்கவும் பயன்படுத்தவும் தடை இல்லை என உத்தரவிடப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை இருக்கும் சூழலில் இரண்டு மாநிலங்களில் மட்டும் உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் தடை இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

  கடந்த 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் கஞ்சா விளைவிக்கவும் பயன்படுத்தவும் (மருத்துவ பயன்பாடு மட்டுமே) தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தற்போது மத்தியபிரதேச மாநிலத்திலும் கஞ்சாவுக்குத் தடை இல்லை என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்தடை நீக்க உத்தரவை மத்தியபிரதேசத்தின் ஆளும் காங்கிரஸ் கட்சி பிறப்பித்துள்ளது.

  இதுகுறித்து மத்தியபிரதேச சட்டத்துறை அமைச்சர் பிசி சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கஞ்சா விளைவிப்பது இனி சட்டப்பூர்வம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது விற்பனைக்குத் தடை உள்ளது. வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது. தொழிற்சாலை மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  புற்றுநோய்க்கான தீர்வுக்காகவே இந்த அனுமதி அம்மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ளதாம். அரசின் இந்த உத்தரவுக்கு மத்தியபிரதேச எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் பார்க்க: கோயிலில் திருடும் முன் பூஜை நடத்தும் திருடன்...வீடியோ!
  Published by:Rahini M
  First published: