ம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க!

அந்தக் கடிதத்தில், ‘சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட உத்தரவிடவேண்டும். காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

news18
Updated: May 20, 2019, 7:32 PM IST
ம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க!
கமல்நாத்
news18
Updated: May 20, 2019, 7:32 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லையென்று பா.ஜ.க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, தேசிய ஊடகங்கள் அனைத்தும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முடிவை வெளியிட்டன. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியிட்டன.

தற்போது, மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், எதிர்கட்சித் தலைவர் கோபால் பார்கவ், மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட உத்தரவிடவேண்டும். காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபால் பார்கவ், ‘பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஆளுநரிடம் கோரிக்கைவைத்துள்ளோம். காங்கிரஸ் அரசு தானாக கவிழும். குதிரை பேரத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அதற்கான நேரம் வந்துள்ளது. அது விரைவில் நடைபெறும். பல காங்கிரஸ் தலைவர்கள் அவர்களது கட்சியுடன் அதிருப்தியுடன் இருக்கின்றனர். வேறு கட்சிகளுக்கு செல்வதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...