கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்ச ரூபாய் - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

சிவ்ராஜ் சிங் சவுகான்

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நாள்ஒன்றுக்கு 4 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்தியாவில் தற்போதுதான் கொரோனா பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

  மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘கொரோனா பாதிப்பால் பெற்றோர் குழந்தைகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், இலவசக் கல்வி, இலவச ரேஷன் பொருட்கள், வட்டியில்லா கடன் போன்றவற்றை அறிவித்திருந்தார். இந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

  கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், 5 லட்ச ரூபாயும் நிதியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். முன்னதாக, டெல்லி மாநில அரசு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள
  Published by:Karthick S
  First published: