கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ரூ.5000 ஓய்வூதியம் - ம.பி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

சிவ்ராஜ் சிங் சவுகான்

கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குகளும், முழுநேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்துக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. மருத்துவ ஆக்சிஜனை இலவசமாக உற்பத்தி செய்து அளிக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். வயதானவர்கள் கவனித்து வந்தவர்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்ததால்  அவர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக இந்த அரசாங்கம் இருக்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் பாதுகாவலர்களை இழந்த குடும்பத்தினருக்கும் மாதம் ரூ 5000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்கும். தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கும் அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில், கடன்களை வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: