• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீராம்- கோஷங்களை வைத்து வன்முறை- எதை நோக்கிச் செல்கிறது மாணவ சமுதாயம்?

பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீராம்- கோஷங்களை வைத்து வன்முறை- எதை நோக்கிச் செல்கிறது மாணவ சமுதாயம்?

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை சில மாணவர்கள் சொல்லவில்லை என்று புகார் எழ இதனையடுத்து அந்த மாணவர்களை அடித்து உதைத்ததன் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை சில மாணவர்கள் சொல்லவில்லை என்று புகார் எழ இதனையடுத்து அந்த மாணவர்களை அடித்து உதைத்ததன் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கூறுவதென்னவெனில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி அடித்து உதைத்தார்கள் என்று குற்றச்சாட்டு வைத்தனர்.

    இது தொடர்பாக முன்னணி ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது: மத்தியபிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டம் பரோட் நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தினந்தோறும் பள்ளி தொடங்கும்போது இறைவணக்கம் பாடப்படும். பின்னர் பாரத் மாதா கீ ஜே என்று கோஷங்களை மாணவர்கள் எழுப்புவார்கள். இந்நிலையில் நேற்று இறைவணக்க நிகழ்ச்சியின்போது சில மாணவர்கள் பாரத் மாதா கீ ஜே கோஷத்தை கூறவில்லை என்று தெரிகிறது. இதை பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் பாரத் சிங் ராஜ்புத் (19) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பாரத் மாதா கி ஜெய் சொல்லாத மாணவர்களை, வேறு சில மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

    மாலையில் ராஜ்புத்தும், பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரோட் பகுதியைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து அடித்து, உதைத்துள்ளனர்.

    இதையடுத்து ராஜ்புத், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் வருமாறு: ராஜா கான், ஷகீல் கான், அஜர் கான், அர்ஷத் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராகேஷ் சாகர் கூறும்போது, “மாணவர் ராஜ்புத் வீட்டுக்குதிரும்பும்போது சிலர் வழிமறித்து அடித்துள்ளனர். இதை வீடியோ எடுக்க முயன்ற ஆசிரியரையும் அவர்கள் அடித்துள்ளனர். ஸ்கூலில் நடந்த சம்பவத்துக்குப் பழி தீர்க்கும் சம்பவம் போல் இது தெரிகிறது, இதுதொடர்பாக 20 பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் இப்படி கோஷங்களை வைத்து பிரேயரிலேயே அடித்துக் கொள்வது மாணவர்கள் எதை நோக்கிச் செல்கின்றனர் என்ற கவலையை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: