உருளைக்கிழங்கு பளபளப்பாக இருக்க புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் ...இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்

உருளைக்கிழங்கு பளபளப்பாக இருக்க புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் ...இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்

உருளைக்கிழங்கு கழுவ ரசாயனம்

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் மினுமினுப்பதை பார்த்தால் யாருக்குத்தான் சாப்பிட ஆசை இருக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்டசோதனையில் உருளைக்கிழங்கு பளபளப்பாக இருக்க புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சன்வாரியா உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை தயாரித்து வருகிறது. இந்த ஆலையில் ஆய்வு நடத்த உணவு மற்றும் மருந்துக் கழக அதிகாரிகள் சென்றபோது ஆலை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. திறக்குமாறு கூறியபோது சாவியை காணவில்லை என ஆலையின் ஊழியர்கள் முரண்டுபிடித்துள்ளனர்.

  காவல்துறையின் உதவியுடன் சுவர் ஏறிக் குதித்த அதிகாரி ஒருவர் பூட்டை உடைத்து மற்ற அதிகாரிகளையும் உள்ளே அழைத்துச் சென்றார். ஆலையின் உரிமையாளர் சுக்லால் குமாவத் தப்பி ஓடியிருந்த நிலையில் அவரது மகனும், மனைவியும் மட்டும் அங்கே இருந்தனர். ஆய்வு செய்தபோது புற்றுநோயை உருவாக்க வாய்ப்புள்ள சோடியம் ஹைட்ராக்சைட் ரசாயனம் 100 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

  பளபளப்பாக தெரிய உருளைக்கிழங்கில் அந்த ரசாயனத்தில் கழுவி சிப்ஸ் தயாரித்துள்ளனர். அதைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள், தொடர்ந்து சோதனை செய்தபோது சிக்கிய ஆயிரம் குவிண்டால் உருளைக்கிழங்கில், 700 குவிண்டால் உருளைக் கிழங்கு அழுகிப் போய் இருந்துள்ளது.



  உருளைக்கிழங்கை சுத்தம் செய்ய வைத்திருந்த 180 லிட்டர் பாமாயிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

   

   



   

  ஆலையின் உரிமையாளர் சுக்லால் குமாவத் ஏற்கெனவே இந்தூரில் மற்றொரு இடத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலையை நடத்தி, உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக புகாருக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளது. அப்போது நடைபெற்ற வழக்கில் தண்டனையாக 95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்தாமலேயே இந்த ஆலையைத் தொடங்கி சுக்லால் குமாவத் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இது குறித்து விளக்கமளித்துள்ள அம்மாநில கூடுதல் கலெக்டர் அபய் பெடேகர், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: