மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு...!

”ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேர் உள்பட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்”

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு...!
கமல்நாத், சிந்தியா (வலப்பக்கம்)
  • Share this:
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

மத்திய பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேர் உள்பட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதனால், முதலமைச்சர் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி முற்றியது.


இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, நாளை சட்டப்பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, முதலமைச்சருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading