ராமரின் பொறியியல் தொழில்நுட்பங்கள் - மத்திய பிரதேச கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்ப்பு

மாதிரிப் படம்

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில், கடவுள் ராமரின் பொறியியல் நுட்பங்கள் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

 • Share this:
  மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, மகாபாரதம், ராமசரித்திரம், யோகா, தியானம் பற்றிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  இதில் "ராமசரித்மனாஸ் பிரயோகித்த தத்துவம்" எனும் பாடம், விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ராமசரித்மனாஸில், நான்கு வேதங்கள், புராணங்கள், இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் ஆன்மீகம் மற்றும் மதம் போன்ற தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.

  முக்கியமாக, ராமர் சேது பாலத்தை எடுத்துக்காட்டாக கொண்டு, "ராமரின் பொறியியல் நுட்பங்கள்" எனும் பாடப்பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதுபோக, கடவுள் ராமர் அவரது தந்தைக்கு கீழ் படிந்து நடந்தது, தீவிர பக்தியோடு செயல்பட்டதை குறிக்கும் பாடங்களும் உள்ளன.

  மனித வாழ்க்கையின் மதிப்பு மற்றும் மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கே இந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.

  அதேசமயம் மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை மேம்படுத்த பைபிள் மற்றும் குர்ஆனிலிருந்தும் பாடங்களை சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  புராணங்கள் தொடர்பான பாடத்திட்டம் மத்தியபிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. 2011ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை தொடர்பான பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கிளம்பிய எதிர்ப்பால் அந்த திட்டம் திரும்பப்பெற பட்டது.
  Published by:Karthick S
  First published: