முகப்பு /செய்தி /இந்தியா / பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 திட்டம்... தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதலமைச்சர்..!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 திட்டம்... தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதலமைச்சர்..!

மாதிரி படம்

மாதிரி படம்

சமூகத்தில் பெண் குழந்தைகள் பாகுபாடு சந்திப்பதை நான் பார்த்து வேதனை அடைந்துள்ளேன். எனவே, இந்த புதிய திட்டம் பெண்களை வலுப்படுத்தும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதையும் படிங்க; இடைத்தேர்தல் தோல்வி... இபிஎஸ் பதவி விலகக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

மத்திய பிரதேச அரசு இந்த திட்டத்திற்கு 'முதலமைச்சர் லத்லி பெஹ்னா யோஜ்னா' என பெயரிட்டுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சிங்  சவுகானின் 65ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட் நிலையில், பிரம்மாண்ட பொதுக்கூட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திரண்டிருந்த பெண் பயனாளர்கள் மத்தியில் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan helps a beneficiary to fill her form during the launch of Mukhyamantri Ladli Behna Yojana, at Jamboree Ground in Bhopal on Sunday. (PTI Photo)

இது குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், "ஒரு நாள் காலை 4 மணிக்கு பெண்கள் முன்னேற்றத்திற்கு இது போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மனதில் எண்ணம் உதித்தது. உடனே, நான் என் மனைவியிடம் இதை பகிர்ந்து கொண்டேன். சமூகத்தில் பெண் குழந்தைகள் பாகுபாடு சந்திப்பதை நான் பார்த்து வேதனை அடைந்துள்ளேன். எனவே, இந்த புதிய திட்டம் பெண்களை வலுப்படுத்தும்" என்றார். உங்கள் சகோதரனாக என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி கட்டாதவர்களுக்கும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவான வருவாய் ஈட்டும் குடும்பத்தின் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்திற்காக மத்தியப் பிரதேச அரசு பட்ஜெட்டில் ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

First published:

Tags: Madhya pradesh, Shivraj Singh Chouhan