மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாநிலம் சோர்ஹடா என்ற விமான பயிற்சி தளம் உள்ளது. இங்கு நேற்றிரவு 11 மணி அளவில் இரு விமானிகள் விமான இயக்க பயிற்சிக்காக வந்துள்ளனர். கேப்டன் விமல் என்ற விமானி சோனு யாதவ் என்ற பயிற்சி விமானியுடன் இரவு 11 மணி அளவில் அனுமதி பெற்று பயிற்சி மேற்கொண்டனர்.
விமானத்தை பயிற்சி விமானி சோனு யாதவ் ஓட்டியுள்ளார். இந்நிலையில், விமானம் ஓடு தளத்தில் இருந்து இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் துர்மி என்ற கிராமத்தில் உள்ள கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குளானது. இந்த விமானம் மோதிய சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதி விழுந்த விமானம் தீப்பற்றி முழுமையாக சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் கேப்டன் விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
பயிற்சி விமானி சோனு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரவு நேரத்தில் இருந்த பனிமூட்டமே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயிலுக்கு அருகே உள்ள மரத்தில் மோதி, விமானம் கட்டுப்பாட்டை இழுந்து கோபுரத்தில் மோதியிருக்காலம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் இருந்து தொழில்நுட்ப குழு சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விபத்து நிகழ்ந்த இடம் கிராமம் என்ற நிலையில், இது குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்திருந்தால் உயிர் சேதங்கள் மேலும் அதிகரித்திருக்கும். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் விமானம் மோதி விழுந்ததால் மோசமான சேதம் தவிர்க்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight Accident, Flight Crash, IAF, Madhya pradesh