மத்தியப் பிரதேசத்தில் 3,000 அரசு மருத்துவர்கள் ராஜினாமா

போராட்டத்தில் மருத்துவர்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என்று உயர் நீதிமன்றம் கூறியதால், மத்திய பிரதேசத்தில் மூன்றாயிரம் அரசு மருத்துவர்கள் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் தீவிரத்தால், நாடு முழுவதும் மருத்துவர்களின் பணிச்சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், உதவித்தொகை உயர்வு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 4 நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 24 மணி நேரத்திற்குள் மருத்துவர்கள் மீண்டும் பணியில் சேருமாறு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது.

  மேலும் நான்கு நாள் வேலைநிறுத்தத்தை "சட்டவிரோதம்" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜுனியர் மருத்துவர்கள், தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச ஜுனியர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அரவிந்த் மீனா தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக பேசிய அவர், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும், மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் தங்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அரவிந்த் மீனா நம்பிக்கை தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: