Home /News /national /

100 ரூபாய் கொடுக்க மறுத்த அண்ணன்.. அடித்துக்கொன்ற தம்பி.. மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்

100 ரூபாய் கொடுக்க மறுத்த அண்ணன்.. அடித்துக்கொன்ற தம்பி.. மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அண்ணன் தனக்கு ரூ.100 தர மறுத்ததால் அவரை தம்பியே அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அண்ணன் தனக்கு ரூ.100 தர மறுத்ததால் அவரை தம்பியே அடித்து  கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தின் பாய்ரிஹா கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான பிரபுதயா பால். இவரது தம்பி 48 வயதான தீன்தயா பால். தனது செலவுக்கு அண்ணன் பிரபுதயாலிடம் தம்பி தீன்தயால் ரூ.100 தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், உனக்கு நான் பணம் தர முடியாது என அண்ணன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி தீன்தயால், அண்ணன் பிரபுதயாலை கீழே பிடித்து தள்ளி கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

Also Read: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை - நெல்லையில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு..

தம்பியின் தாக்குதலில் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விவரத்தை காவல்துறையிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த புதார் பகுதி காவல்துறை பிரபுதயால் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவடம் தொடர்பாக தம்பி தீன்தயாலை கைது செய்த காவவ்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. தீன்தயால் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நூறு ரூபாய்க்காக அண்ணனை தம்பியே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Death, Madhya pradesh, Murder

அடுத்த செய்தி