நாட்டின் மிக உயரிய அதிகாரம் மிக்க தலைவரான பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் SPG பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் வீரர்களுடன் வேட்டை நாய்களும் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்படும். இந்த நாய்களில் இதுவரை வெளிநாட்டு ரக நாய்களே இருந்து வந்த நிலையில், தற்போது பிரமதர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டு ரக முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் முதோல் என்ற தாலுகா உள்ளது. இங்கு காணப்படும் சிறப்புத் தன்மை பெற்ற நாட்டு வகை நாய்கள் முதோல் நாய்கள் என சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றவை.
இவற்றை ராணுவம், கர்நாடகா, கேரளா காவல்துறை போன்ற அமைப்புகள் பயன்படுத்தி வந்தன. இந்த நாய்களின் சிறப்புத் தன்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். பொதுவாக நாட்டு நாய்கள் மீது நாட்டம் கொண்ட பிரதமர் மோடி, ராஜபாளையம், ராம்பூர் கிரேஹவுண்ட் போன்ற இனங்கள் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார்.
இதையடுத்து பிரதமரின் பாதுகாப்புக்கு நாட்டு நாய்களை சேர்க்க மேற்கண்ட நாய்களின் இனங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இறுதியாக முதோல் இன நாய்களை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்து 2 மாதங்களே ஆன இரண்டு முதோல் இன நாய்குட்டிகளை பிரதமர் மோடியின் பாதுகாப்பு வீரர்கள் எடுத்துச் சென்று பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: கவர்ச்சி உடை அணிந்தவர்கள் மீதான பாலியல் சீண்டல், குற்றமாகாது : நீதிமன்ற கருத்தால் சர்ச்சை
இந்த நாய்களின் பார்வைத்திறன் மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், நுண்ணுணர்வு துரிதமாக செயல்படும் விதத்திலும் இருக்கும். மன்னர் காலத்தில் இந்த இன நாய்கள் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதோல் இன நாய்கள் ஒல்லியான, உயரமான தோற்றத்தை கொண்டவை. இவை சராசரியா 20 முதல் 22 கிலோ எடையுடன், 72 செமீ உயரத்துடன் காணப்படுபவை. சிறந்த மோப்பத்திறன் கொண்டவை. தற்போது பிரமதர் மோடியின் பாதுகாப்பு குழுவில் நாட்டு ரக முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, PM Modi, Security guards