ஹோம் /நியூஸ் /இந்தியா /

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு

பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் | அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் | அமைச்சர் ராஜ்நாத் சிங்

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற இலக்கை பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் பூர்த்தி செய்வதாக கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Jodhpur, India

  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Prachand என பெயரிடப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் நேற்று ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரச்சந்த் ஹெலிகாப்படர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

  1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, சியாச்சின் போன்ற மிகவும் உயர்ந்த பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க ஹெலிகாப்படர்கள் இன்றி இந்திய ராணுவம் தவித்தது. அப்போது இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்த ரஷ்யாவின் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அதிக உயரத்தில் பறக்க கூடியதாக இருக்கவில்லை.

  இதனால் இந்திய விமானப்படை MI-17 ரக ஹெலிகாப்டர்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து 2006- ஆம் ஆண்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், சியாச்சின், லடாக் போன்ற பகுதிகளில் அதிக உயரத்தில் பறக்கும் வகையிலான ஹெலிகாப்படர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்தது. பின்னர் 2010- ஆம் ஆண்டு முதல் இலகுரக போர் ஹெலிகாப்படர் தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

  Read More : ‘இது மட்டும் நடந்தால் சினிமாவுக்கு பாட்டு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்’ – வைரமுத்து சுவாரசிய பேட்டி

  தொடர்ந்து 2019- ஆம் ஆண்டு இலகுரக விமானங்களை இயக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் பிரச்சந்த் என்று பெயரிடப்பட்டுள்ள இலகுரக ஹெலிகாப்படர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரச்சந்த் ஹெலிகாப்படர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

  இந்து, இஸ்லாம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அப்போது விமானப்படை தரப்பில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற இலக்கை பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் பூர்த்தி செய்வதாக கூறினார். இதையடுத்து, கவச உடை அணிந்து, பிரச்சந்த் ஹெலிகாப்டரில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார்.

  ராணுவ தலைமை தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் நிகிழ்ச்சியில் பங்கேற்றனர். 3 ஆயிரத்து 887 கோடி ரூபா ய் மதிப்பில் 15 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 10, விமானப்படைக்கும் மீதமுள்ள 5 ராணுவத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

  இலகுரக ஹெலிகாப்டர்களின் வீடியோ இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  பிரச்சந்த் ஹெலிகாப்டரில் விமானி மற்றும் துணை விமானி என இருவர் அமரலாம். ஹெலிகாப்டரில் கவச பாதுகாப்பு உள்ளது. இரவிலும் தாக்கும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் தரையிறங்கும் கியர் உள்ளது. இரண்டு சக்தி வாய்ந்த என்ஜின்களுடன் இயக்கப்படுகின்றன. அதிகபட்சம் 5,800 கிலோ எடையை தூக்கிச் செல்லும்.

  மணிக்கு 268 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். 6.5 கிலோ மீ.ட்டர் உயரம் வரை பறக்குத் தன்மை கொண்டது. அனைத்து வானிலையிலும், மலை மற்றும் பாலைவனத்திலும் இயங்கும். வானத்திலிருந்து வான் வெளியில் தாக்கும் ஏவுகணைகளையும் தரையிலிருந்து தரையைத் தாக்கும் ஏவுகணைகளையும் கொண்டுள்ளது. 20 mm துப்பாக்கி & 70 mm ராக்கெட்டுகள் உள்ளன. காக்பிட் முற்றிலும் கண்ணாடி இழைகளால் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் குழுவினருக்கு எலக்ட்ரானிக் உடை அளிக்கப்படும். எதிரி கவச வாகனங்களை தாக்கும் வகையில் தாழ்வாகவும் வேகமாகவும் பறக்க வல்லது. ராணுவத்தினருக்கு முன்னால் பறந்து எதிரிகளின் இருப்பைக் கண்டறியும். எதிரிகளின் வான் தளவாடங்களை அழிக்க வல்லது. மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: India, Indian Air force Day, Indian army