Home /News /national /

காந்தி குடும்பத்தை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம் - காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

காந்தி குடும்பத்தை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம் - காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சர்ச்சை கருத்து

காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சர்ச்சை கருத்து

சோனியா காந்தி மீதான விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தியது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுக்காக அவரிடம் விசாரணை நடத்த கடந்த மாதம் 8ஆம் தேதி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி தொடர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையில் இருந்தார். எனவே, அவர் தொற்றில் இருந்து மீண்டு உடல்நலம் தேறிய பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவகாசம் அளித்தது.

    இதைத் தொடர்ந்து அவர் நேற்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சோனியா காந்தி மீதான விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தியது. போராட்டம் நடத்திய முன்னணி தலைவர்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சோனியா காந்தி மீதான நடவடிக்கை குறித்து கர்நாடகா மாநில முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரமேஷ் குமார் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய ரமேஷ் குமார், காங்கிரஸ் கட்சியினர் காந்தி குடும்பத்திற்காக தியாகம் செய்வ வேண்டியது கடமை. நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பெயரை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கான பணத்தை நாம் சம்பாதித்து விட்டோம். இப்போது இந்த தியாகத்தை கூட அவர்களுக்கு செய்யவில்லை என்றால் அது நியாயமாக இருக்காது என்ற தொனியில் இவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தலித் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

    சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் காந்தி குடும்பத்தின் பெயரை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கு பணம் சேர்த்துவிட்டோம் என பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டுகால செயல்பாட்டை ரமேஷ் குமார் தெளிவாக புரிய வைத்துள்ளார் என பாஜகவினர் இவரது பேச்சை கிண்டலடித்து பகிர்ந்து வருகின்றனர்.


    சோனியா காந்தியிடம் முதல் நாளான நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அடுத்து 25 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Enforcement Directorate, Gandhi family, Karnataka congress, National herald, Sonia Gandhi

    அடுத்த செய்தி