சித்தூர் நரபலி சம்பவம்: கொல்லப்படுவதற்கு முன்பாக சகோதரிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதியப்பட்ட போஸ்ட்டுகள்..

கோப்பு படம்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்

  • Share this:
    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே, அமானுஷ்யங்களை நம்பி, பூஜை செய்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மூத்த மகள் அலேக்யா (27) மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ்  படித்து வந்தார். சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.

    கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி இருந்துள்ளனர். சாய் திவ்யா, அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அடித்து கொலை செய்து பூஜைகள் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    சித்தூர் மதனபள்ளி நரபலி சம்பவம்


    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், போலீசார் மற்றும் உறவினர்களை கூட அவர்கள் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.

    தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளிகளான புருஷோத்தம் நாயுடு - பத்மஜா இருவரும், மதனபள்ளி சப்- ஜெயிலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சித்தூர் நரபலி சம்பவம்: ’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் உள்ளது’ - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..

    நீதிமன்றக் காவலுக்கு முன்னதாக, புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்ற போலீசாரிடம், விநோதமாகவும் ஒத்துழைக்காமலும் நடந்துகொண்ட பத்மஜா, “நான் சிவனின் அவதாரம். என் கழுத்தில் விஷம் உள்ளது. அதனால் நான் ஏற்கனவே கொரோனாவை அகற்றிவிட்டேன். சிவன் திரும்பி வந்துவிட்டார். நான்தான் சிவன்” என்று கூச்சல் போட்டுள்ளார். அதன்பிறகு போலீஸ் வேனிலேயே அமரவைத்து, கொரோனா பரிசோதனைக்காக throat swab-ஐ மருத்துவர்கள் எடுத்தனர்” என்று மதனபள்ளி காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு தெரிவித்துள்ளதாக பிரபல தனியார் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை (25.01.2021) கொலைசெய்த இரண்டு மகள்களின் உடலுக்கு, மதனபள்ளி இடுகாட்டில் புருஷோத்தம் நாயுடு தீமூட்டியுள்ளார். மகள்களுக்கு இறுதி மரியாதை செய்ய தாய் பத்மஜா வராத நிலையில், “எங்கள் மகள்களை தேவையில்லாமல் கொன்றுவிட்டோம். நாங்கள் வாழத் தகுதியானவர்கள் இல்லை” என்று கூறினார் என காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு தெரிவித்திருக்கிறார்.

    “எங்கள் மகள்களை தேவையில்லாமல் கொன்றுவிட்டோம். நாங்கள் வாழத் தகுதியானவர்கள் இல்லை” - புருஷோத்தம் நாயுடு

    மேலும், சாய் திவ்யா, அலேக்யா என்னும் இரு சகோதரிகளின் இன்ஸ்கிராம் பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருக்கும் “Work is done" "Shiva is Coming" போன்ற வாசகங்கள், குடும்பத்தின் அதீத நம்பிக்கைகள், கற்பனைகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமியர்களையும் குறித்த சர்ச்சையான கருத்தும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published: