Home /News /national /

'எம்.ஏ இங்கிலிஷ் டீக்கடை' : 26 வயது பெண்ணின் புதுவித முயற்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

'எம்.ஏ இங்கிலிஷ் டீக்கடை' : 26 வயது பெண்ணின் புதுவித முயற்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

MA English Chaiwali

MA English Chaiwali

சொந்த காலில் நிற்க வேண்டுமென சுய தொழிலை தொடங்குகின்றனர். இதில் பெரும்பான்மை ஆண்களாக பல காலம் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக பெண்களும் சுய தொழிலை ஆரம்பித்து வெற்றி பெறுகின்றனர்.

சமீப காலமாக புது புது தொழில்களை கண்டுபிடித்து அதன் மூலம் ஸ்டார்ட் அப் போன்ற அமைப்பில் பல சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதே போன்று சுய தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. படித்த இளம் வயதினர் ஐ.டி நிறுவனங்களிலோ, அரசாங்க வேலைகளிலோ கவனம் செலுத்துவதை குறைத்து தனது சொந்த காலில் நிற்க வேண்டுமென சுய தொழிலை தொடங்குகின்றனர். இதில் பெரும்பான்மை ஆண்களாக பல காலம் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக பெண்களும் சுய தொழிலை ஆரம்பித்து வெற்றி பெறுகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த துக்துகி தாஸ் என்ற 26 வயது பெண், தனது வாழ்க்கை பயணத்தை டீக்கடையில் இருந்து தொடங்கி உள்ளார். சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவர், எம்.ஏ ஆங்கிலம் வரை படித்துள்ளார். இதை குறிக்கும் வகையில், தான் சொந்தமாக தொடங்கியுள்ள டீக்கடைக்கு "'எம்.ஏ இங்கிலிஷ் சாய்வாலி" என்று பெயரிட்டுள்ளார். இந்த டீக்கடை மேற்கு வங்கத்தில் உள்ள ஹாப்ரா இரயில் நிலையத்தில் 2 ஆவது பிளாட்பார்மில் அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இவரின் இந்த டீக்கடை தான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவர் எம்.ஏ ஆங்கிலம் படித்து விட்டு ஏன் டீக்கடை தொடங்க வேண்டும் போன்ற சில கேள்விகளுக்கு துக்துகி தாஸ் பதிலளித்துள்ளார். "எனக்கு எப்போதுமே சுய தொழில் தொடங்க வேண்டுமென்ற கனவு இருந்தது. சிறிய அளவு பணத்தை வைத்து எனது இந்த கனவை நான் நனவாக்கி விட்டேன்" என்று மகிழ்வுடன் கூறுகிறார்.

Also read:  மது குடிப்பவர்கள் பொய் பேச மாட்டார்கள் - அரசு அதிகாரியின் பகீர் லாஜிக்

பொதுவாக மிடில் கிளாஸ் குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக படித்து, அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்த்திருப்பார்கள். இல்லையேல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதே நிலை தான் இவருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் துக்துகி தாஸிற்கு வேறு சில கனவுகள் இருந்தன. தனது முதுகலை பட்டத்தை முடித்த பிறகு சொந்தமாக ஒரு டீக்கடை தொடங்க வேண்டும் என்று எண்ணினார்.

இந்த கனவு இவருக்குள் உருவாவதற்கு எம்.பி.ஏ சாய்வாலா பிராஃபுல் பில்லோர் மற்றும் சாய்வாலி உப்புமா விர்டி ஆகிய இருவரும் தான் காரணம் என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த கடையை தொடங்குவதற்காக துக்துகி தாஸ் 10000 ரூபாய் செலவழித்துள்ளார். இந்த பணத்தை குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லி தந்ததன் மூலம் சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ளார். இந்த கடையின் பெயருக்காகவே இவர் விரைவில் வைரலாகி விட்டார். இதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக இவர் தெரிவிக்கிறார்.

Also read:   அரசியல்வாதி மீது செக்ஸ் புகார் எழுப்பிய சீன டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மாயம்! - அதிர்ச்சியில் சக நட்சத்திர வீராங்கனைகள்

"சிலர் டீ விற்பதை ஏளனமான தொழிலாக பார்க்கின்றனர். இது போன்றவர்கள் கொஞ்சம் கூட மரியாதை இன்றி நடக்கின்றனர். இது உண்மையில் எனக்கு வேதனை தருகிறது. எல்லா தொழிலையும் மதிக்க வேண்டும்" என்று துக்துகி தாஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். "டீக்கடையை எங்கு வைப்பது என்று யோசித்த போது கல்லூரிகள், மருத்துவமனைகள், இரயில் நிலையங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்தேன்; கொரோனாவால் கல்லூரிகளை மூடி விட்டனர்; அதே போன்று அருகில் மருத்துவமனைகள் எதுவும் திறக்கவில்லை. எனவே தான் இரவில் நிலையத்தை தேர்ந்தெடுத்து இங்கு எனது டீக்கடையை திறந்தேன்" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், "பலர் எனக்கு உதவி செய்வதாக சொன்னார்கள். ஆனால் நான் எனது சொந்த காலில் நிற்க விரும்பினேன். எனவே அவர்களின் உதவிகளை பெறவில்லை. நல்லதோ கெட்டதோ, அதை நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்" என்று தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியுடன் துக்துகி தாஸ் வெளிப்படுத்தினார். இவர் முதல் நாள் கடையை திறந்த போது 2 மணி நேரம் வரை தனது டீயை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை பெற முயற்சித்துள்ளார். இவரின் தொடர் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல், இவரின் கடையை பார்ப்பதற்காகவே பலர் எங்கிருந்தெல்லாம் வருவார்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.

இந்த டீக்கடை முயற்சி மேலும் நன்றாக சென்றால் கூடுதலாக பல கடைகளை கொல்காத்தாவில் திறப்பேன், என்று எதிர்கால கனவுகளுடன் துக்துகி தாஸ் உள்ளார்.

 
Published by:Arun
First published:

Tags: Kolkata

அடுத்த செய்தி