Home /News /national /

‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!

‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!

‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!

‘கால்பாய் வேலை மோசடி’... ரூ.17 லட்சத்தை இழந்த வேலையில்லா பட்டதாரி!!

அந்த இளைஞரும் அதனை நம்பி, தனது தந்தையின் வாழ்நாள் சேமிப்பு வரை வீட்டில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து அவர்கள் கேட்டபடி கொடுத்து வந்துள்ளார்.

    சைபர் மோசடியில் ஈடுபடுவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு புது புது யுக்திகளை கண்டுபிடித்து நாள்தோறும் வகைவகையாக ஏமாற்றி வருகிறார்கள். சமீபத்தில் மும்பையில் வேலையில்லா பட்டதாரி ஒருவர் இதுபோன்ற சைபர் மோசடியில் சிக்கி தனது தந்தையின் வாழ்நாள் சேமிப்பை இழந்து செய்வதறியாது நிற்கிறார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, 27 வயது பட்டதாரி இளைஞர் ஒருவர் இணையத்தில் வந்த போலியான  ‘கால்பாய்’ விளம்பரத்தை நம்பி, அந்த எண்ணில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசியவர்களும், அந்த இளைஞருக்கு உறுதியாக வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி, அதற்கான லைசன்ஸ், அறை வாடகை, உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அந்தவகையில், அந்த இளைஞர் கடந்த ஜூலை முதல் அக்டோபர் 2021 வரை ரூ.17லட்சத்தை இழந்துள்ளார்.

    பின்னர் தாமதாகவே, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அந்த இளைஞர் உணர்ந்துள்ளார். இதையடுத்து, புனேவின் தாட்டாவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - தேர்தலை குறிவைத்து அமைச்சரவையை கூண்டோடு கலைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி!

    பிளேபாய் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் ’கால்பாய்’ வேலைக்கு ஆள்தேவை என்ற விளம்பரத்தை அந்த இளைஞர் பார்த்துள்ளார். மேலும், அந்த விளம்பரத்தில் ஒரு மணி நேரத்தில் ரூ.3000 வரை சம்பாதிக்கலாம் என்று உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தை அணுகியதில் அதில் பலரும் நம்பிக்கையுட்டும் விதமாக அவரிடம் பேசியுள்ளனர். தொடர்ந்து, லைசன்ஸ், அறை வாடகை, போலீஸ் சரிபார்ப்பு, பிக்அப் மற்றும் டிராப் கட்டணம், பாலிசி பிரீமியம் உள்ளிட்டவைளுக்காக பணம் அனுப்பும்படி கேட்டுள்ளனர்.

    அந்த இளைஞரும் அதனை நம்பி, தனது தந்தையின் வாழ்நாள் சேமிப்பு வரை வீட்டில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து அவர்கள் கேட்டபடி கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, அந்த இளைஞரின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

    வீட்டில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் தான் பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் தற்போது மொத்த பணத்தையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகிறார்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரங்களின் அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Cyber crime, Cyber fraud, Online Frauds

    அடுத்த செய்தி