நாளை சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கெல்லாம் காணலாம் தெரியுமா?

சந்திர கிரகணம்

நாட்டில் சில பகுதிகளில் பகுதியளவு சந்திர கிரகணத்தை நாளை (புதன்கிழமை) காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இது குறித்து, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பகுதியளவு சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் புதன்கிழமை காண முடியும் என்று தெரிவித்துள்ளது.

  நாளை மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

  இந்த பகுதி சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும். முழு சந்திர கிரகணம், மாலை 4:39 மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்கு நிறைவடையும். பகுதி சந்திர கிரகணம், மாலை 6:23 மணிக்கு முடிவடையும்.

  Read More : இந்தியாவில் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

   

  அதை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

  Must Read :  தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...

   

  நாளை ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின்னர், இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை நவம்பர் 19ஆம் தேதி காணலாம் அது அது, பகுதியளவு சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: