ஹோம் /நியூஸ் /இந்தியா /

தன்னை கடத்திவிட்டதாக நாடகமாடி நண்பரை காண சென்ற பள்ளிச் சிறுமி: வளைத்து பிடித்த போலீசார்!

தன்னை கடத்திவிட்டதாக நாடகமாடி நண்பரை காண சென்ற பள்ளிச் சிறுமி: வளைத்து பிடித்த போலீசார்!

 பள்ளிச் சிறுமி

பள்ளிச் சிறுமி

COVID-19 லாக்டவுன் காரணமாக மிக இளம் வயதில் ஸ்மார்ட் போன்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் இதுபோன்ற தவறான வழிகளில் அவர்களை திசைதிருப்பச் செய்துள்ளது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொரு நாளும் குழந்தை காணாமல் போகும் செய்திகளை நாம் கேட்டு கொண்டுதான் இருக்கிறோம். குழந்தை கடத்தல் இன்னும் ஓயாத ஒரு பிரச்சனையாகவே நாட்டில் இருக்கிறது. இந்த விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்திய சிறுமி ஒருவர், தன்னை கடத்தியாக கூறி பெற்றோர்களிடம் நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளிக்கு சென்ற சிறுமி தனது நண்பரை சில மணி நேரங்கள் சந்திக்க வேண்டும் என்பதற்காக கடத்தல் நாடகத்தை நிகழ்த்தி பெற்றோரையும், காவல்துறையையும் கலங்கடித்துள்ளார்.

லூதியானா பகுதியில் பாமியன் காலனில் வசிக்கும் பதின்வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாமல் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது நண்பரைச் சந்திக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டார். வீடு திரும்பாத சிறுமிக்கு என்ன நேர்ந்தது எனக் பெற்றோர்கள் பயத்தில் மூழ்கியிருந்தனர். காலையில் வீட்டை விட்டு பள்ளிக்குச் சென்ற சிறுமி மதியம் சரியான நேரத்தில் வீடு திரும்பாததால் மிகவும் கவலையடைந்தனர். தனது மகள் வீடு திரும்பாததற்கான காரணத்தை அறிய பாமியன் காலனில் வசிக்கும் மற்றொரு வகுப்பு தோழியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர்.

தனது பெற்றோர்கள் காட்டாயம் தோழியிடம் தன்னை குறித்து கேட்பார்கள் என்று முன்பே அறிந்த சிறுமி, ஒரு நாடகத்தை தீட்டியுள்ளார். மேலும் தன்னை கடத்திவிட்டார்கள் என்று கூறும் படி தனது வகுப்பு தோழியிடம் கேட்டுள்ளார். அதற்கு உடந்தையாக தோழியும் செயல்பட்டிருக்கிறார். சிறுமியின் பெற்றோரிடம் ஐந்து ஆண்கள் உங்கள் பெண்ணை கடத்திச் சென்றதாக ஒரு பொய் கதையை விவரித்துள்ளார்.

ALSO READ |  கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களும்..முழுமையான விளக்கங்களும்..!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மேலும் விசாரிக்க போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட வகுப்பு தோழி, சிறுமி காணாமல் போனதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் ஹேப்பி காலனியில் உள்ள ஒரு நண்பரை சந்திக்க சென்றதாகவும் கூறியுள்ளார். காணாமல் போன சிறுமி, ஒரு தினத்திற்கு முன்னதாக தனது நண்பர்களை வாட்ஸ்அப் குழுவில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கப்பட்டர்கள் என்பதால் தனது வகுப்பு தோழியை பெற்றோரிடம் பொய் சொல்லுமாறும் கூறியுள்ளார். இந்த உண்மை தெரிந்தவுடன், ஜமால்பூர் போலீசார், ஹேப்பி காலனியில் சிறுமி சென்ற வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை மீட்டு பாதுகாப்பாக அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேசிய ஜமால்பூர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் இன்ஸ்பெக்டர் குஷ்வந்த் சிங், விசாரணையின் போது சிறுமியின் வாட்ஸ்அப் சாட்களை கண்டுபிடித்ததாகவும், அதுதான் அவர்களை ஹேப்பி காலனியில் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

ALSO READ |  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

மேலும் நண்பரை சந்திப்பதற்காக போடப்பட்ட இந்த முழு கடத்தல் திட்டமும் அதற்கு முந்தைய தினம் வாட்ஸ்அப்பில் அந்த சிறுமியால் உருவாக்கப்பட்டுள்ளது. COVID-19 லாக்டவுன் காரணமாக மிக இளம் வயதில் ஸ்மார்ட் போன்களை குழந்தைகள் பயன்படுத்துவதால் இதுபோன்ற தவற வழிகளில் அவர்களை திசைதிருப்பச் செய்துள்ளது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Crime News