இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கம்

இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பின் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு முறையும் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவை பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, UAPA எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் 2024ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்படுவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: