சமையல்எரிவாயு சிலிண்டரின்விலை2 ரூபாய் 89 காசுகளாகஉயர்த்தப்பட்டுள்ளது. இந்தவிலைஇன்றுமுதல்அமலுக்குவருவதாகஇந்தியன்ஆயில்நிறுவனம்தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 59 ரூபாயாக உயர்ந்துள்ளது. மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் 89 காசுகளாக அதிகரித்துள்ளது. விலை உயர்த்தப்பட்டிருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை 376 ரூபாய் 60 காசுகளாக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் வரை இந்த மானியத் தொகை 320 ரூபாய் 49 காசுகளாக இருந்தது.
மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரில், நீர்ம பெட்ரோலியத்தோடு, 20 விழுக்காடு மெத்தனால் கலந்து விநியோகிக்க, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
ALSO WATCH...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.