நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் ஒரு வீட்டுக்கு, மானியத்துடன் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. சிலிண்டருக்கான மானியம் 2015ம் ஆண்டு முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 2015ல் ஒரு சிலிண்டரின் விலை 998 ஆக இருந்த நிலையில், 563 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. சந்தை விலைப்படி சிலிண்டருக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதற்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 28.90 கோடி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் வரை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் பெட்ரோலிய மானியமாக மத்திய அரசு 40,915 கோடியை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம், 12,995 கோடி ரூபாயாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதேநேரம் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச எரிவாயு இணைப்பு சேவையான உஜ்வாலா திட்டத்தில், ஏற்கெனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் ஒரு கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். உஜ்வாலா திட்டம் 2016ம் ஆண்டு மே 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் போக்சோவில் கைது..
உஜ்வாலா திட்டத்துக்கு பெருமளவு தொகையை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.