Home /News /national /

நாங்கள் ஆட்சி அமைத்தால் சிலிண்டர் விலை ரூ.500ஐ தாண்டாது.. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

நாங்கள் ஆட்சி அமைத்தால் சிலிண்டர் விலை ரூ.500ஐ தாண்டாது.. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

உத்தராகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தராகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தராகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    உத்தராகண்டில் நாங்கள் ஆட்சி அமைத்தால் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500ஐ தாண்டாது என்று உறுதி அளிப்பதாக சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    மேலும் படிக்க: 5 மாநில தேர்தல்: எங்கு எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

    இதில், தேசிய அளவில் 5 மாநில தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இதனிடையே, சமீபத்தில் 5 மாநிலங்கள் தேர்தலில் எந்த கட்சி எங்கு வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதில், உத்தராகண்டில் பாஜக அதிகளவிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதேசமயத்தில் காங்கிரஸூம் அதிக தொகுதிகளை கைப்பற்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.



    இந்நிலையில், உத்தராகண்டில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், இன்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்த அக்கட்சியின் தலைவர் பூபேஷ் பாகல், உத்தராகண்டில் நாங்கள் ஆட்சி அமைத்தால் சிலிண்டர் விலை ரூ.500ஐ தாண்டாது என்று அறிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: எதிர்கட்சிகளின் வியூகம்.. பாஜகவுக்கு சாதகம்.. மீண்டும் 2017 தேர்தல் முடிவு எதிரொலிக்குமா?
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Election 2022

    அடுத்த செய்தி