வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 9:34 AM IST
  • Share this:
வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஒரு சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இதன் காரணமாக கடலோர ஆந்திரா,தெலங்கானா மற்றும் ஒடிசாவிற்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை சற்று தொய்வடைந்த நிலையில் இருந்தது,இன்று உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading