வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 18, 2018, 8:19 PM IST
  • Share this:
வங்கக் கடலையொட்டி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ``கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா வழியாக கடந்து சட்டிஸ்கரை அடைய வாய்ப்பிருக்கிறது.


இதன் காரணமாக வடக்கு ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சட்டிஸ்கர் மற்றும் மேற்கு மாநிலங்களில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழை பெய்யும். தமிழகத்தைப் பொருத்தவரை இன்று இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற உள்ளதால் மத்திய, தெற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்’’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
First published: September 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading