ஊட்டச்சத்துக் குறைபாடால் இந்தியாவில் தொடரும் மரணங்கள்!

ஊட்டச்சத்துக் குறைபாடால் நிகழும் மரணங்கள் இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் குறைவாகவே உள்ளன.

Web Desk | news18
Updated: April 5, 2019, 1:01 PM IST
ஊட்டச்சத்துக் குறைபாடால் இந்தியாவில் தொடரும் மரணங்கள்!
மாதிரிப்படம் (Reuters)
Web Desk | news18
Updated: April 5, 2019, 1:01 PM IST
ஊட்டச்சத்துக் குறைபாடால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மரணமடைவதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

போதிய உணவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடால் சர்வதேச அளவில் ஐந்தில் ஒருவர் பாதிக்கப்படுவதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது. 195 நாடுகளில் 1990-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் 15 ஊட்டச்சத்துக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. இதில், சர்வதேச அளவில் ஐந்தில் ஒருவர் ஊட்டசத்துக் குறைபாடால் மரணமடைவதாகக் கூறப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டும் மட்டும் உலகம் முழுவதும் 1.1 கோடி மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடால் மரணமடைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டில் மட்டும் உணவில் குறைவான அளவிலேயே தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள், விதைகள் உட்கொண்டவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடால் மரணமடைந்துள்ளனர். கொழுப்பு நிறைந்த உணவுகள், குளிர்பானங்கள், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கறி வகைகளை அதிகளவில் உட்கொள்வதும் மரணங்களுக்கு காரணமாக அமைகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடால் நிகழும் மரணங்கள் இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் குறைவாகவே உள்ளன. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 310 பேர் ஊட்டச்சத்துக் குறைபாடால் மரணமடைவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க: பிரசார பாதை | தமிழிசையாகிய நான்...! தொகுதிக்கு என்னென்ன செய்வேன் தெரியுமா...?
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...