Home /News /national /

காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு ‘லவ் டார்ச்சர்’- போலீஸ் வேடிக்கைப் பார்க்காது: பினராயி விஜயன் எச்சரிக்கை

காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு ‘லவ் டார்ச்சர்’- போலீஸ் வேடிக்கைப் பார்க்காது: பினராயி விஜயன் எச்சரிக்கை

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து துன்புறுத்துவது, கொலை செய்வது, அமில வீச்சு ஆகியவை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடந்த ஜூலை 30-ம் தேதி, எர்ணாகுளம் மாவட்டத்தில் 24 வயது மருத்துவ மாணவி ஒருவர் அவரது சமூக ஊடக நண்பரால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப் பட்டார். காதலை ஏற்கவில்லை என்பதற்காக அப்பெண்ணை சுட்டுக் கொன்ற அந்த நபர், பிறகு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த சம்பவத்தை சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப் பினர் பி.டி.தாமஸ் நேற்று கவனத் துக்கு கொண்டு வந்தார். எம்எல்ஏ.க்களின் கேள்வி களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது:

    காதல் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்து வோருக்கு எதிராக காவல் துறை ஒருபோதும் மென்மையாக நடந்து கொள்ளாது. காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படும். பெண்களை அச்சுறுத்துதல், பின்தொடர்தல் உள்ளிட்ட புகாருக்கு ஆளானவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இரண்டாவதாக கேரளா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 1455 கேஸ்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்காகப் பதியப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகள் 256% அதிகரித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Kerala, Kerala cm

    அடுத்த செய்தி