• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காதல் திருமணம் செய்தவரின் தந்தை, சகோதரர் சட்டவிரோதமாக கைது - போலீசார் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை!

காதல் திருமணம் செய்தவரின் தந்தை, சகோதரர் சட்டவிரோதமாக கைது - போலீசார் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை!

Love Marriage

Love Marriage

மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் பையனின் தந்தையும், சகோதரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

  • Share this:
காதல் திருமணம் செய்த நபரின் தந்தை மற்றும் சகோதரரை சட்டவிரோதமாக கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரில் போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவிக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசித்து வந்தனர்.

வரம்பு மீறிய போலீசார்:

இந்நிலையில் பெண்ணின் தந்தை தனது மகளை டெல்லியை சேர்ந்த இரு நபர்கள் செப்டம்பர் 8ஆம் தேதியன்று வீட்டில் இருந்து கடத்தியதாக உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், டெல்லி சென்ற உத்தரப்பிரதேச காவல்துறையினர், புகார் அளித்த நபருடைய பெண்ணை திருமணம் செய்தவருடைய தந்தையையும், மூத்த சகோதரரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இவ்விருவரையும் போலீசார் சட்டவிரோதமாக கைது செய்ததாகவும் இந்த வழக்கில் ஒவ்வொரு மட்டத்திலும் போலீசார் விதிமீறலிலும் ஈடுபட்டதாக தெரியவந்தது.

Also read:  சங்கி என்பதா? மோடிக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன் - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பதிலடி

இதையடுத்து, காதல் திருமணம் செய்த ஜோடி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 164வது சட்டப்பிரிவின் கீழ் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன்படி, தங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் சட்டப்பூர்வ வயது இருந்ததால் இருவரும் அவர்களின் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் இதற்காக பெண் வீட்டார் அளித்த புகாரின் கீழ் தனது தந்தையையும், மூத்த சகோதரரையும் சட்டவிரோதமாக போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.

Also read:  வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோவில்.. விநோத வேண்டுதல்களுடன் உண்டியலில் கிடந்த கடிதங்கள்...

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரியை கடந்த அக்டோபர் 28ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. பின்னர் இதுபோன்ற போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கைகள் டெல்லியில் நடைபெறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த வழக்கில் ஒவ்வொரு மட்டத்திலும் விதிமீறலில் ஈடுபட்டிருக்கும் சம்பந்தபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த ஷாம்லி மாவட்டத்தின் கோட்வாலி காவல் நிலைய விசாரணை அதிகாரி பங்கஜ் தியாகி மற்றும் சர்மா ஆகிய இரு போலீசாரை பணி நீக்கம் செய்து ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் மிஸ்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: