தாய் மொழியின் மீதான காதல் அல்லது வேட்கை எதோ ஒரு உணர்வின் உந்துதலலால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தச்சுத்தொழிலில் ஈடுபட்டு வந்த 22 வயது இளைஞர் இன்று விக்கிபீடியாவில் கட்டுரையாளராகி, தனது சாதாரண மொபைல் கீ பேடிலேயே கட்டுரைகளை எழுதத் தொடங்கி இதுவரை 1,800க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தச்சுத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் விக்கிபீடியாவில் கட்டுரையாளராக மாறியிருக்கிறார் ராஜு ஜங்கித், இவருக்கு வயது 22. ஜோத்பூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இவர் 10ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தொழிலான தச்சுத்தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் விக்கிபீடியாவில் கட்டுரையாளராக மாறியிருக்கிறார்.
சாதாரண கீ பேடிலேயே இவர் 57,000 கட்டுரைகளை எடிட் செய்ததை அறிந்த விக்கிபீடியா நிறுவனத்தார் இவருக்கு லேப்டாப் மற்றும் இலவச இண்டர்நெட் இணைப்பை வழங்கியிருக்கின்றனர். அங்கிருந்து கட்டுரைகளை எழுதத் தொடங்கி இன்று வரை 1,800க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருப்பதுடன், 57,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எடிட் செய்துள்ளார்.
எனது கிராமம் குறித்து விக்கிபீடியாவில் உபயோகமான அளவில் எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. அதை ஏற்படுத்தவே விக்கிபீடியாவில் கட்டுரையாளராக மாறியதாக தெரிவித்துள்ள ஜங்கித், தனித்தேர்வராக 12வது வகுப்பு மற்றும் பிஏ ஆகியவற்றை முடித்திருக்கிறார். தற்சமயம் விக்கி ஸ்வஸ்தா எனும் விக்கிபீடியாவின் சிறப்பு பகுதிக்காக பணியாற்றி வருகிறார். என்னற்ற நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொண்டுள்ளார்.
341 மில்லியன் இந்தி பேசும் மக்கள் இருக்கின்றனர். ஆனால் 1.4 லட்சம் இந்தி பக்கங்களே விக்கிபீடியாவில் உள்ளன. தற்போது 1,100 கட்டுரையாளர்களே உள்ளோம். எனவே நாங்கள் கூடுதலாக பணியாற்றி மேலும் பல தகவல்களை உள்ளூர் மொழியில் சென்று சேர்க்க உதவுவோம் என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.